வியாழன், 30 டிசம்பர், 2010

மண்மணம்



எல்லாவித நறு மணக்களாலும்
என்னை குளிப்பாட்டிக் கொண்டேன்
ஆனாலும் எஞ்சி இருக்கிறது
எனது கிராமத்தின்
செம்மண் வாசனை

திங்கள், 20 டிசம்பர், 2010

கனவுகள்


கனவுகள்



கனவுகளில் மீளாத கவிதைகளோடு
என் அன்பிற்கினிய புத்தகமே

பறவையின் சிறகுகளில் பனி படரும்
பொழுதுகளில் மெல்லிய விரல்களுக்குள்
சிறைப்பட்டிருந்தாய் நீ

நானோ நனவுகளின்
கொடுஞ் சிறையில் மிதிப்பட்டிருந்தேன்

எப்போதோ எழுதப்பட்டதாக
உனக்கும் எனக்குமான உறவு

கனவுகள்

கனவுகளில் மீளாத கவிதைகளோடு
என் அன்பிற்கினிய புத்தகமே

பறவையின் சிறகுகளில் பனி படரும்
பொழுதுகளில் மெல்லிய விரல்களுக்குள்
சிறைப்பட்டிருந்தாய் நீ

நானோ நனவுகளின்
கொடுஞ் சிறையில் மிதிப்பட்டிருந்தேன்

எப்போதோ எழுதப்பட்டதாக
உனக்கும் எனக்குமான உறவு